மக்களிடம் அதிகம் வரவேற்பு பெறும் எந்த நிகழ்ச்சிக்கு சூதாட்டம் என்கிற வடிவம் ஏதோ ஒரு வடிவில் புகுந்து விளையாடும். வெறுமனே பணம் வைத்து விளையாடுவது என்பது தொன்று தொட்டு இருக்கும் பழக்கம். ஆனால் இப்போது மக்களிடம் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் எது நடந்தாலும் அதை வைத்து பெட் கட்டி விளையாடுவது என்று சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
அதன் வழியில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் யார் ஜெயிப்பது என போட்டி போட்டுக்கொண்டு பந்தயம் வைத்திருந்தனர். அதன் அடிப்படையில் மணப்பாறையை சேர்ந்த சக்திவேல் என்பவர். திமுக அனுதாபி. அவர் தனக்கு நெருக்கமான பிஜேபி அனுதாபியான மணிவேலிடம் இந்த எம்.பி. தேர்தலில் திமுக கூட்டணி 30 இடங்களுக்கு மேல் வெற்றிபெறும் என்று பேசியிருக்கிறார்.
பிஜேபி அனுதாபியான மணிவேலுவோ அதற்கு வாய்ப்பே கிடையாது. பிஜேபி தலைமையிலான கூட்டணி தான் 30 இடங்களை பிடிக்கும் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த பேச்சு அப்படி காரசாரமாக மாறி கடைசியில் இருவரும் 5,000 ரூபாய் பந்தயம் சொல்லி 20 ரூபாய் பத்திரத்தில் எழுதி இரண்டு பேரும் வைத்துக்கொண்டனர்.
கடந்த 23ம் தேதி எம்.பி. தேர்தலுக்கான முடிவுகள் வெளியானது. இதில் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 இடங்களில் வெற்றி பெற்றதால் ஒப்பந்தப்படி தன்னுடைய தோல்வியை ஒத்துக்கொண்ட மணிவேல் சக்திவேலிடம் 5,000 ரூபாய் பந்தைய தொகையை கொடுத்து சாட்சிகள் முன்பாக எழுதி கொடுத்து பணத்தை ஒப்படைத்தார்.