தமிழகத்தில் 54 ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. சங்கர், தமிழக காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையராக கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யாக தேன்மொழி, போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையராக பவானீஸ்வரி, சேலம் காவல் ஆணையராக சந்தோஷ்குமார், நெல்லை நகர காவல் ஆணையராக அன்பு, தமிழக காவல்துறை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக தினகரன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறை பொதுப்பிரிவு ஐ.ஜி.யாக பெரியய்யா, மதுரை சரக டி.ஐ.ஜி.யாக சுதாகர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.யாக பாண்டியன், சென்னை காவல் தலைமையக இணை ஆணையராக மகேஸ்வரி, நெல்லை எஸ்.பி.யாக கிருஷ்ணராஜ், தூத்துக்குடி எஸ்.பி.யாக மணிவண்ணன், சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையராக செந்தில்குமார், சென்னை காவல்துறை மேற்கு மண்டல இணை ஆணையராக ராஜேஸ்வரி, சென்னை தெற்கு மண்டல காவல்துறை இணை ஆணையராக லட்சமி, அரியலூர் எஸ்.பி.யாக பாஸ்கரன், ராணிப்பேட்டை எஸ்.பி.யாக சிவக்குமார், நீலகிரி எஸ்.பி.யாக பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி எஸ்.பி.யாக ராஜன், சிவகங்கை எஸ்.பி.யாக ராஜராஜன், கரூர் எஸ்.பி.யாக மகேஸ்வரன், தூத்துக்குடி பேரூரணி சீருடைப் பணியாளர் பள்ளியின் தலைவராக சரவணன், திருவல்லிக்கேணி இணை ஆணையராக பகலவன், அம்பத்தூர் இணை ஆணையராக மகேஷ், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக எஸ்.பி.யாக வந்திதா பாண்டே தமிழக காவல்துறை நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக அருண், சென்னை போக்குவரத்து தெற்கு மண்டல இணை ஆணையராக செந்தில் குமாரி, சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையராக பாலகிருஷ்ணன், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. கணேசமூர்த்தி, கியூ பிரிவு எஸ்.பி.யாக கண்ணம்மாள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் ஒரேநாளில் 54 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.