Skip to main content

தண்ணீரில் தத்தளிக்கும் கேரளா மக்களுக்கு உதவி செய்யும் தமிழர்கள்!

Published on 12/08/2018 | Edited on 12/08/2018
kerala


தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கேரளாவை சேர்ந்த இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பத்துக்கு மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவும், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவும் ஏற்பட்டது.

 

 

இதில் 15 பேர் பலியானர்கள். இப்படி மழையால் மண்சரிவில் பலியானவர்களில் 13 உடல்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இடுக்கி அணை நிரம்பி வழிந்து வருவதை தொடர்ந்து செருதோணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அதில் உள்ள நான்கு மதகுகளிலும் தண்ணீர் திறக்கப்பட்டதால் செரு தோணி நகரத்தையோட்டியுள்ள பாலத்தில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இப்படி ஓடக்கூடிய தண்ணீர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து வருவதால் அப்பகுதியில் உள்ள மக்களும் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறார்கள்.
  kerala


இதுபோல் இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டி பெரியார், தேவிகுளம் உள்பட பல பகுதிகளில் தொடர் மழையால் அப்பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த பகுதிகளை கூட கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான குழு நேற்று ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு விட்டு சென்றனர். அப்படி இருந்தும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு சரிவர உணவும் மருத்துவ வசதிகளும் கிடைக்காமல் தவிர்த்து வருகிறார்கள். அப்படி இருந்தும் கூட தொடர்ந்து இன்னும் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதை கண்டு பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்து வருகிறார்கள்.
 

kerala


இப்படி தனது மாவட்டத்திற்கு அருகே உள்ள கேரளா மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருவதை கண்டு தேனி மாவட்டத்தில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் அரிசி மற்றும் உணவு பொருட்களை குமுளி வழியாக கொண்டு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியுள்ளனர். அதை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சிகள் உள்பட சில சமூக அமைப்புகளும் கேரள மக்களுக்கு உதவி செய்ய தயாராகி வருகிறார்கள்.
 

kerala


அதுபோல் அப்பகுதியில் உள்ள கேரளா பத்திரிகை ரிப்போட்டர்களிடம் கேட்ட போது... தொடர் மழையால் தத்தளித்து வரும் மக்களுக்கு உடனடியாக மருந்துகள், குழந்தைகளுக்கு பால்பவடர், பிஸ்கட், ரொட்டி துண்டு, போர்வைகள் மற்றும் சேலை, வேஷ்டி சட்டைகள் தேவை படுகிறது. அதை உடனடியாக அனுப்பிவைத்தால் நல்லா இருக்கும் என்று கூறினார்கள். அதை தொடந்து தான் முதன் முதலில் தேனி மாவட்டத்தில் இருந்து உதவி பொருட்கள் சென்று கொண்டு இருக்கிறது.

சார்ந்த செய்திகள்