Skip to main content

தந்தையிடம் சொன்ன பேராசிரியர்; தற்கொலை செய்துகொண்ட மாணவி

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

tambaram chitlapakkam college girl  cell phone issue

 

தாம்பரத்தில் பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தாம்பரத்தை அடுத்துள்ள சிட்லபாக்கம் பகுதியில் வசித்து வருபவர் முரளிதரன். இவரது மகள் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாமாண்டு படித்து வருகிறார். முரளிதரன் தனது மனைவி மற்றும் மகனுடன் தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்று உள்ளார். அவரது மகள் மட்டும் சிட்லபாக்கத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

 

இந்நிலையில், முரளிதரனும் அவரது மனைவியும் அவர்களது மகளுக்கு செல்போனில் தொடர்பு கொண்ட போது, அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர், தங்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி கூறியுள்ளனர். மேலும், வீட்டில் தனியாக உள்ள தங்களது மகளைப் பார்க்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். பக்கத்து வீட்டுக்காரர் முரளிதரன் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அவரது மகள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர் இதுகுறித்த தகவலை முரளிதரனுக்கு தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கல்லூரிக்குச் சென்ற மாணவி, தேர்வு நடக்கும் மையத்துக்கும் செல்போனை எடுத்துச் சென்றுள்ளார். இதனைக் கண்டித்த கல்லூரி நிர்வாகம், அவரது பெற்றோருக்கும் இது குறித்த தகவல் கொடுத்துள்ளனர். கல்லூரிக்கு செல்போனை எடுத்துச்செல்ல வேண்டாம் எனவும், வீட்டிலும் செல்போனை அதிக நேரம் பயன்படுத்த வேண்டாம் எனவும் பெற்றோரும் மாணவியைக் கண்டித்துள்ளனர். இதனால் விரக்தியடைந்த கல்லூரி மாணவி வீட்டில் தனியாக இருந்தபோது தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கல்லூரி மாணவி தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்