/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mtc-bus-art-chennai-central--background_1.jpg)
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (M.T.C) சார்பில் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.200 கோடி எல்.ஐ.சி. பிரீமியம் தொகையை சம்பள பட்டியல் பிரிவு உதவி மேலாளர் முறைகேடு செய்துவிட்டதாக தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு விளக்கம் அளித்துள்ளது. அதில், “சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் பிரீமியம் தொகை 3 - 4 மாத கால அவகாசத்தில் மாதந்தோறும் செலுத்தப்படுகிறது. இது பற்றி தொழிலாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்.ஐ.சியில் நவம்பர் 2023க்குரிய மாத சந்தா 15.04.2024 அன்று சரி செய்யப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை, நோட்டீஸ் வந்திருப்பதாக கூறி ஊடகங்களில் தொழில்நுட்பப் பணியாளர் துளசிதாஸ் தவறாக காட்டியுள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tn-fact-check-art_0.jpg)
அவரால் குற்றம் சாட்டப்பட்ட சம்பளப் பட்டியல் பிரிவு உதவி மேலாளரின் பணி ஊதியத்தைக் கணக்கிடுவது மட்டுமே. பணம் செலுத்துவது அவர் பணியல்ல. இதை அறிந்தும் அவர் மீது துளசிதாஸ் குற்றம்சாட்டியுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் விளக்கமளித்துள்ளது. எனவே வதந்திகளை பரப்பாதீர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)