Skip to main content

உயிரிழந்ததா 'டி23'..?-நீர்நிலைகளை நோக்கும் வனத்துறை! 

Published on 10/10/2021 | Edited on 10/10/2021

 

 Is 'T23' over?

 

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேவன் எஸ்டேட் பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த 'டி23' புலியை 16வது நாளாக வனத்துறையினர் தேடி வருகின்றனர். இதுவரை நான்கு மனித உயிர்களையும், 30க்கும் மேற்பட்ட கால்நடைகளையும்  கொன்றுள்ள இப்புலியைப் பிடிக்க அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனைத்  தொடர்ந்து புலியைச் சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் வனத்துறை சார்பில் புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

 

கும்கி யானைகளை வைத்து புலியைப் பிடிக்கும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மரங்களின் மீது பரண்கள் அமைத்துக் கண்காணிக்கப்பட்டது. அதேபோல் இமேஜ் ட்ராப், ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்பட்டது. கூடலூரிலிருந்து புலி மசினகுடி நோக்கிச் சென்ற நிலையில், சிங்காரா வனப்பகுதியில் வனத்துறையினர் கடந்த ஒரு வாரமாகத் தீவிர தேடுதலில் ஈடுபட்டு இருந்தனர். தேடுதல் வேட்டையின் முதல் இரண்டு நாட்கள் வனத்துறையினரின் கண்ணில் பட்ட புலி தற்போது வரை வனத்துறையினரின் கண்ணில் சிக்கவில்லை. கண்காணிப்பு கேமராவிலும் புலியின் நடமாட்டம் பதிவாகவில்லை. இதனால் ஒருவேளை 'டி23' இறந்திருக்கலாம் என வனத்துறை கருதுகிறது. புலியின் ஆயுட்காலம் 14 வருடங்கள் என்ற நிலையில், 'டி23' புலிக்கு 13 வயது ஆகிறது. அதேபோல் உடலில் காயங்களுடன் சுற்றித்திரிந்த புலி ஒருவேளை இறந்திருக்கலாம் என வனப்பகுதியை ஒட்டியுள்ள நீர்நிலைப் பகுதிகளில் வனத்துறையினர் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்