![sasikala](http://image.nakkheeran.in/cdn/farfuture/5URZ68jVPYpKlwtcP5lqWsZ1gMB4IIFcpXR3mJxrpss/1544895142/sites/default/files/inline-images/75.jpg)
செந்தில் பாலாஜி கட்சி மாறியது பற்றி சிறையில் இளவரசியிடம் பேசிய சசிகலா, தினகரனைப் பற்றி சில கருத்துக்களை கூறியுள்ளார்.
''தினகரன் ரொம்ப ஓவராக ஆட்டம் போடுகிறான். அதனால்தான், செந்தில் பாலாஜி அவனை விட்டு விலகியுள்ளார். திமுகவில் சேர்ந்துள்ளார்'' என சொன்ன சசிகலா, அதற்கான காரணத்தையும் சொல்லியிருக்கிறார். செந்தில் பாலாஜி தினகரனுக்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்துள்ளார். செந்தில் பாலாஜிக்கும் சேலஞ்சர் துரை என்பவருக்கும் ஆகாது. அந்த சேலஞ்சர் துரை சமீபத்தில் ஒரு டெம்போ டிராவலர் ஒன்றை தினகரனுக்கு வாங்கி கொடுத்துள்ளார்.
அந்த டெம்போ டிராவலரில் சேலஞ்சர் துரை ஏறிக்கொள்கிறார். வேறு யாரையும் அதில் ஏற அனுமதிப்பதில்லை. சமீபத்தில் புயல் பாதித்த பகுதிகளை பார்க்க சென்ற தினகரனின் டெம்போ டிராவலரில் ஏற அந்த பகுதியில் மிகப் பிரபலமான குடவாசல் ராஜேந்திரன் முயற்சித்துள்ளார். அவரை சேலஞ்சர் துரை ஏற அனுமதிக்கவில்லை. அதனால் கடுப்பான குடவாசல் ராஜேந்திரன் மண்ணை வாரி தூற்றி சேலஞ்சர் துரையையும், தினகரனையும் திட்டியுள்ளார்.
தினகரனுக்காக உழைத்தவர்களையெல்லாம் இப்படி காயப்படுத்திறீங்களே? நீங்க நல்லா இருப்பீங்களா? என்று குடவாசல் ரஜேந்திரன் சாபமிட்டது சசிகலாவின் காதுகளுக்கு சென்றுள்ளது. இந்த சம்பவத்தைச் சொல்லி வருத்தப்பட்ட சசிகலா, தினகரன் ஆட்டம் ஓவராக இருக்கிறது என்று தனது கோபத்தை பதிவு செய்துள்ளார்.
அத்துடன் இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா ஆகியோரையும் தினகரன் மதிப்பதில்லை என இளவரசியும் தன் பங்குக்கு தினகரன் பற்றி கோபப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலாவுக்கும், துணைப் பொதுச்செயலாளரான தினகரனுக்கும் இடையே ஒரு பெரிய பணிப்போர் நிலவுவதாக அமமுக வட்டாரங்களும், பெங்களுரு சிறை வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.