Skip to main content

அரசு பள்ளியை தத்தெடுக்கும் கல்வி காவலர்கள் !

Published on 21/11/2019 | Edited on 21/11/2019

காவல்துறை என்றாலே மக்கள் மத்தியில் ஒரு தனிப்பட்ட பார்வை இருந்துவரும் நிலையில் அதை முறியடிக்கும் வகையில் சில காவலர்கள்
செயல்பட்டு வருகிறார்கள் என்பதும் உண்மையே.

 

puliyanthope police officers adopt school

 

 

அந்த வகையில் புலியந்தோப்பு காவல் ஆய்வாளர் கே. கிருஷ்ணமூர்த்தி புலியந்தோப்பு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை தத்தெடுத்த சில தினங்களிலே பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்துகொடுத்துள்ளார். 

புலிந்தோப்பு, நடுத்தர மக்கள் அதிகம் வாழும் இப்பகுதியில், அரசுப் பள்ளியை நோக்கி பயணிக்கும் குழந்தைகள் பெரும்பாலானோர் ஏழை எளியோரின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். இந்த நிலையில் குழந்தைகள் வளரும் சூழ்நிலைதான் அவர்களின் வருங்காலத்தை தீர்மானிக்கும் என்ற வகையில், புலியந்தோப்பு நடுநிலைப்பள்ளி போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் சூழ்நிலையை கண்ட புலியந்தோப்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, தலைமை ஆசிரியர் ஹெலனைச் சந்தித்து அந்த பள்ளியை தத்தெடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். 

அதன் அடிப்படையில் முதல் கட்டமாக பள்ளி உட்புற, வெளிப்புற சுவர்கள் , கழிவறை ஆகியவை சீரமைக்கப்பட்டு வர்ணங்கள் பூசப்பட்டன. பின்னர் கழிவறைகளுக்கு தேவையான கதவுகள் அமைத்து 20.11.2019 தேதி அன்று சென்னை வடக்கு கூடுதல் ஆணையாளர் ஆர். தினகரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. மாணவர்கள் அமரும் வகையில் மேசை, மின் விசிறி, காலணிகள், துணி, குடிநீர் வசதி, கேரம் பேர்டு, செஸ் போர்டு, கைபந்து, கிரிக்கெட் பேட் போன்ற விளையாட்டுப்பொருட்கள் ஆகியவற்றையும் பள்ளிக்கு வழங்கினார்.

இது தொடர்பாக பேசிய வடக்கு கூடுதல் ஆணையாளர் தினகரன், "வட சென்னை மக்கள் என்று சொன்னாலே ஒரு பொது பார்வை இருக்கிறது. அதை மாற்றவேண்டும் என்றால் அது கல்வியால் மட்டுமே முடியும். அந்த கல்வியோடு மாணவர்களுக்கு விளையாட்டு ஆர்வமும் ஊட்டும் போது
மாணவர்களின் மனநிலை மாற்றம் அடையும். தவறான பாதைக்கு போகாமல் தடுக்கப்படுவார்கள். அந்த அடிப்படையிலேயே இதை நாங்கள் முன்னெடுத்துள்ளோம் இதனால் மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்" என தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஜாஃபர் சாதிக் வழக்கு; துணை நடிகருக்கு இ.டி சம்மன்   

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
N

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ.2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்தப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.கவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த ஜாஃபர் சாதிக்கை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கைது செய்து மூன்று நாட்கள் காவல் கஸ்டடியில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர். தொடர்ந்து ஜாஃபர் சாதிக்கின் பினாமி என்று கூறப்பட்ட ஆவடியைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் எட்டு மணி நேரமாக சோதனை நடைபெற்றது. இந்நிலையில் ஜாஃபர் சாதிக்கின் சகோதரரும், துணை நடிகருமான மைதீன் என்பவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஜாஃபர் சாதிக் தயாரித்து அமீர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'இறைவன் மிகப்பெரியவன்' படத்தில் மைதீன் துணை நடிகராக பணியாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. நேற்று ஜாஃபர் சாதிக்கின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இன்று ஜாஃபர் சாதிக்கின் சகோதரருக்கு சம்மன் அனுப்பியுள்ளது அமலாக்கத்துறை.

Next Story

தட்டி தூக்கும் போலீசார்; துப்பாக்கி முனையில் ரவுடி கைது

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
knock-down police; The rowdy was arrested at gunpoint

தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் ரவுடிகளை கைது செய்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த 11 பேரில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசார் விசாரணையின் பொழுது தப்பிக்க முயன்றதோடு பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை நோக்கி சுட முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த என்கவுன்டர் ரவுடிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ரவுடிகள் சுட்டுப் பிடிக்கப்படுவதோடு, பயத்தில் சரணடைந்தும் வருகின்றனர். இந்நிலையில் சென்னை அருகே தலைமறைவாக இருந்த ரவுடியை துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆறு மாதங்களாக ரவுடி சேதுபதி போலீசார் கண்ணிலிருந்து தப்பி தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் சென்னை  புழல் அருகே சூரபட்டு பகுதியில் ரவுடி சேதுபதி தலைமறைவாக  இருப்பதாக தகவல் கிடைக்க, அங்குச் சென்ற போலீசார், துப்பாக்கி முனையில் சேதுபதியைக் கைது செய்துள்ளனர்.

ஐந்து கொலை வழக்குகளும், 30-க்கும் மேற்பட்ட கொலை முயற்சி உள்ளிட்ட குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளியான சேதுபதி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கஞ்சா வழக்கில் சிக்கியிருந்த நிலையில் தலைமறைவாக இருந்தார். தற்பொழுது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் ரவுடிகளை கைது செய்து வரும் நிலையில் துப்பாக்கி முனையில் ரவுடி சேதுபதியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.