Published on 29/08/2018 | Edited on 29/08/2018
தே.மு.தி.க தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அவர் அவ்வப்போது மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுவிட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனையொட்டி நடிகர் பார்த்திபன் செவ்வாய்க்கிழமை விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தியதோடு பிறந்தநாளுக்காக ஒரு மெழுகு விளக்கை பரிசளித்துள்ளார். அப்போது உடல்நலம் குறித்தும் விசாரித்துள்ளார். அதற்கு விஜயகாந்த், நாலே மாதத்தில் என்னை பழைய மிரட்டலுடன் காணப்போகிறீர்கள் என கூறியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் பார்த்திபன்.