Skip to main content

"தேர்வு எழுத மட்டும் மாணவர்கள் வந்தால் போதும்"- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்! 

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

"Students only need to come to write the exam" - Minister Anbil Mahesh False Information!

 

வெயிலின் தாக்கம் அதிகரித்ததின் காரணமாக, ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (04/05/2022) ஆலோசனை மேற்கொண்டார். இதில், பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

 

ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 1 முதல் 9- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம். தேர்வு இல்லாத நாட்களில் 1 முதல் 9- ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. 1 முதல் 9- ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் நாளை முதல் வழக்கமான வகுப்புகளுக்கு வரத் தேவையில்லை. வெயில் தாக்கம் காரணமாக, மாணவர்கள் நலன் கருதி முடிவெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். 

 

சார்ந்த செய்திகள்