Skip to main content

கேரளாவில் அரசு பள்ளியை நோக்கி மாணவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்... தமிழகத்தில் அப்படியா? - மதுக்கூர் ராமலிங்கம் பேச்சு  

Published on 05/03/2020 | Edited on 05/03/2020

சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் ராஜா தலைமை வகித்தார், மாவட்டக்குழு உறுப்பினர் முத்து அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைபாளராக மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் கலந்து கொண்டது சிதம்பரம் நகரம், குமராட்சி ஒன்றியம், புவனகிரி ஒன்றியம், காட்டுமன்னார்கோவில் வட்டம், கீரப்பாளையம் ஒன்றியம் பகுதிகளிலிருந்து கட்சி  நிதி வழங்கியதை பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றி பேசுகையில், தமிழகத்தில் மக்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அச்சத்துடன் போராடுகிறார்கள். தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். ஓபிஎஸ் இபிஎஸ் டெல்லிக்கு யுபிஎஸ் ஆக இருந்து ராஜாவை மிஞ்சும் ராஜாவாக அதிமுகவினர் செயல்படுகிறார்கள். மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என பெருமை பேசும் இவர்கள் அதில் தமிழக மாணவர்கள் பெரும்பான்மையாக படிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

 

Students are coming to Government school in Kerala ... In Tamilnadu? - Madukkur Ramalingam Talk


டெல்லி கலவரத்தின்போது ஆறு இஸ்லாமிய சகோதரர்களை காப்பாற்றி ஒரு இந்து சகோதரன் உடலில் ஏற்பட்ட தீக்காயத்தால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அதேபோல் மசூதியில் ஏற்றிய காவி கொடியை ரவி என்ற இந்து இளைஞன் அகற்றியுள்ளனர். இந்து, இஸ்லாமியர் மதங்களை கடந்து சகோதரர்களாக வாழ்கிறவர்கள் ஒற்றுமையே கலைக்க முடியாது. மூவர்ண தேசிய கொடியை வடிவமைத்தது ஒரு இஸ்லாமிய சகோதரன் என்பதை மறந்து விடக்கூடாது. காத்திருப்பு போராட்டத்தில் வீட்டைவிட்டு வெளியில் வராத இஸ்லாமிய பெண்கள் அறவழியில் உணர்வுடன் போராடி வருகிறார்கள். ஆனால் ஆதரவு போராட்டம் 200-க்கு ஆளை கூட்டி வந்து கூட்டத்தை சங்கிகள் காட்டுகின்றனர். இது உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கும்.

 

Students are coming to Government school in Kerala ... In Tamilnadu? - Madukkur Ramalingam Talk


டெல்லி கலவரம் குறித்து முறையான விசாரணையை நீதிபதி முரளிதரன் மேற்கொண்ட போது அவரை இரவோடு இரவாக மாற்றுகிறார்கள். 2002-இல் குஜராத்தில் இவர்களிருவரும் செய்ததை தற்போது இந்தியா முழுவதும் செய்ய துடிக்கிறார்கள்.

மனித வளர்ச்சி குறியீட்டின் முதல் மாநிலமாக கேரளா உள்ளது. இங்கு ட்ரம்பை அழைத்துவந்து காட்டாமல் குடிசைகள் தெரியக்கூடாது என குட்டிசுவர் அமைத்து குஜராத்தை காட்டுகிறார் மோடி. கேரளாவில் தனியார் பள்ளியை தவித்து அரசு பள்ளியை நோக்கி மாணவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் தமிழகத்தில் அப்படியா? என்ற அவர் ஒருகாலத்தில் ஜாதியின் பெயரால் மறுக்கப்பட்ட கல்வி, தற்போது பணத்தால் மறுக்கப்படும் நிலை ஏற்படும் சூழல் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என முதலில் சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியது செங்கொடி தலைமையிலான கேரளா அரசு அதனை தொடர்ந்து 13 நாடுகள் எதிர்த்துள்ளது. 40 ஆண்டுகளில் இல்லாத கொடுமைகளை மோடியின் அரசு செய்து வருகிறது.

அது மட்டுமல்ல தமிழகத்தின் பிரதான கோயில்களை தொல்லியல் கட்டுப்பாட்டில் எடுத்து சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சிகளை செய்து வருகிறது. இது மத சார்பற்ற அரசியலுக்கு எதிரானது. ஹிட்லர் போல் மோடி சட்டங்களை கொண்டு வருகிறார். இதனை எதிர்த்து வரும் 9-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக சட்டமன்ற கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்து உள்ளது. தேசபக்தர்களுக்கும் தேசதுரோகிகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்திற்கு தமிழக மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

 

 

சார்ந்த செய்திகள்