Skip to main content

மகளை வன்கொடுமை செய்த வளர்ப்புத் தந்தை; கண்டுகொள்ளாத தாய் !

Published on 03/03/2025 | Edited on 03/03/2025

 

Foster father misbehave with daughter

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவருக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்ற நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அதன்பிறகு அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரை அந்த பெண் மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் பெண் குழந்தைகள் தாய் மற்றும் வளர்ப்பு தந்தை என நான்கு பேரும் ஒன்று ஒன்றாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்த அந்த பெண்ணின் மூன்றாவது கணவர், தனியாக இருந்த இரு பெண் குழந்தைகளில் ஒருவரான 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டலும் விடுத்திருக்கிறாராம்.

இருப்பினும் அந்த சிறுமி தனது தாயாரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். ஆனால், அதனைக் கண்டிக்காமல், தாயார் சிறுமியிடம் இதனை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என்று மூன்றாவது கணவனின் செயலுக்கு துணைபோயுள்ளார்.  இந்த நிலையில் செய்வதறியாது தவித்து வந்த சிறுமி பள்ளி தலைமையாரிசியரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்துபோன தலைமையாரிசியர் குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து புகாரின் பேரில் குன்னூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் சிறுமியின் தாய் மற்றும் வளர்ப்புத் தந்தை ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்தௌ விசாரணையை தீவிரப்படுத்தினர். மேலும், தலைமறைவாக இருக்கும்  2 பேரையும் தேடி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்