
கரூர் மாவட்டம், பாலவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் 10ஆம் வகுப்பு மாணவி. இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த மாணவரை சந்திப்பதற்காக பாதிக்கப்பட்ட மாணவி சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அந்த மாணவன், மாணவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த அந்த மாணவி, மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, அந்த மாணவி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை அறிந்த போலீசார், அந்த மாணவரை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருடைய நண்பர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி மயக்க நிலையில், இருப்பதால் எதனால் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது என்பது முழுமையாக தெரியவரும் என்று காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. பள்ளி மாணவியின் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.