Published on 31/10/2022 | Edited on 31/10/2022

கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை உள்ளிட்ட சுங்கச் சாவடிகளில் ஆட்குறைப்பு செய்யப்பட்டதற்கு அனைத்து சுங்கச்சாவடி ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் வேலை செய்து வந்த 28 ஊழியர்கள் முன் அறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதன் காரணமாக கடந்த 30 நாட்களுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் பல்வேறு கட்டங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று சுங்கச்சாவடி ஊழியர்கள் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எங்களுக்குப் பணி வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.