Skip to main content

அயர்ந்து தூங்கிய நேரத்தில் திருட்டு; கோயம்பேடு மார்க்கெட்டில் பரபரப்பு

Published on 09/01/2025 | Edited on 09/01/2025
Stealing while fast asleep; Busy in Koyambedu market

சென்னை கோயம்பேட்டில் மார்க்கெட் பகுதியில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் செல்போனை மூன்று இளைஞர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை கோயம்பேடு காய்கனி அங்காடி பகுதியில் கத்தியுடன் மூன்று இளைஞர்கள் சுற்றித்திரிந்துள்ளனர். திடீரென பாதி கதவு திறக்கப்பட்ட நிலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் செல்போனை லாவகமாக திருடிச் சென்றனர். இது தொடர்பான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரித்து சூர்யா, அழகுதுரை, திருவேற்காடு சூர்யா என்ற மூன்று பேரைக் கைது செய்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்