Skip to main content

பேராசிரியரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் ஸ்டாலின்!!

Published on 27/10/2018 | Edited on 27/10/2018

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 21-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அதன்பின் தற்போது அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததாக அவர் வீட்டுக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 

 

 Stalin inquired the professor personally

 

இந்நிலையில் வீட்டில் ஓய்வெடுத்துவரும் அவரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். 

 

 

ஏற்கனவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது நேரில் சென்று நலம் விசாரித்த ஸ்டாலின் பேராசிரியர் க.அன்பழகன் உடல் நலத்தோடு இருக்கிறார். தற்போது அவருக்கு காய்ச்சல் குறைந்துள்ளது. சில நாட்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால் அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் கூறியிருந்தார். 

 

 Stalin inquired the professor personally

 

இந்நிலையில் தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காரணமாக அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார். இந்த சந்திப்பின்போது திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உடனிருந்தார்.  

சார்ந்த செய்திகள்