Published on 13/04/2019 | Edited on 13/04/2019
நடக்கவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழக அரசியல் பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி தென்னுர் உழவர்சந்தை பகுதியில் நடந்த திமுக காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டத்தில் திருச்சி காங்கிரஸ் வேட்பாளர் திருநாவுக்கரசரை ஆதரித்து பிரச்சாரம் செய்து பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,
திமுகவின் எஃ கு கோட்டை திருச்சி, கலைஞர் கருணாநிதிக்கு அதிகமாக பிடித்த ஊர் திருச்சி. மத்தியில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. திமுகவின் எண்ணங்கள் காங்கிரஸ் அறிக்கையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை ஹீரோ காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோ ஆனால் பாஜக தேர்தல் அறிக்கை ஜீரோ எனக்கூறினார்.