Published on 17/01/2020 | Edited on 17/01/2020
கடந்த 8-ம் தேதி இரவு 8.30 மணிக்கு களியக்காவிளை சந்தைவழி போலீஸ் சோதனை சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற திருவிதாங்கோடு அப்துல் சமீம், இளங்களைட தௌபீக் இருவரையும் எஸ்.பி ஸ்ரீநாத் தலைமையிலான 10 தனிப்படைகள், கியூ பிரிவு, உள்பாதுகாப்பு பிரிவு போலீஸார் கேரளா போலீஸாருடன் இணைந்து தேடிவந்தனா்.

இந்த தேடுதலின் போது, கா்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த 14ஆம் தேதி கர்நாடக போலீஸ் இவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக தடைசெய்யப்பட்ட அல் உம்மா அமைப்பை சேர்ந்த மன்சூர், ஜெபிபுல்லா, அஜ்மத்துல்லா ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட மெஹபூப் பாஷாவை தற்போது பெங்களூருவில் போலீசார் கைது செய்துள்ளனர்.