Published on 15/10/2019 | Edited on 15/10/2019
நடிகர் சங்க தேர்தல் சட்டப்படி நடத்தப்படாததால் செல்லாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம். மேலும் நடிகர் சங்க தேர்தல் நடைமுறைகளில் தலையிடவில்லை எனவும், நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல் சங்க நிர்வாகிகளுக்கு 6 மாதங்களுக்கு பதவி நீட்டிப்பு செய்ய சங்க விதிகளில் இடமில்லை என்று தமிழக அரசு தரப்பு கூறியுள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நடிகர் சங்க தேர்தல், உறுப்பினர்கள் நீக்கம் தொடர்பான வழக்கை 18- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23- ஆம் தேதி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.