சாதிக்க பிறந்த சமூக அமைப்பு நடத்தும் திருநங்கை ராணி தமிழகத்தின் தேடல் என்ற மாபெரும் நிகழ்வு சென்னை மியூசிக் அகாடமியில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் 13 திருநங்கைகள் அக்சரா, ஆஷிகா, அமீரா, அனீஷா, இனியா, மது, நபீஸா, நட்சத்திரா, ரேணுகா, ரேணுகா, ஸ்வேதா, யாழினி, சரினா உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
இரண்டு சுற்றாக இந்த போட்டிகள் நடைப்பெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட அனைத்து திருநங்கைகளுக்கும் மகுடம் சூட்டி அழகு பார்க்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நடிகை கஸ்துரி, மலைக்கா, ப்ரியதர்ஷினி ராஜ்குமார், சுபிக்ஷா சோனியா, அம்பிகா பிரசாத், அனில் கோதரி, ஹரிஹரன் கொண்ட 7 பேர் நடுவர்களாக போடப்பட்டுள்ளார்கள்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், திரைப்பட நடிகர், நடிகைகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியயாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, திருநங்கை என்ற பெயரை சூட்டி அவர்களுக்கென தனி வாரியத்தை அமைத்து, அந்த வாரியம் மூலமாக திருநங்கைகளுக்கான பிரச்சனைகளை தீர்த்து வைத்த கலைஞருக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.
அதன் பின்னர், திருநங்கைகளுகாண பார்வை சமூகத்தின் பார்வையில் எவ்வாறு உள்ளது என்ற தலைப்பில் நாமக்கல்லைச் சேர்ந்த (திருநங்கை) ரேவதி நாடகம் ஒன்றை நடத்தி சிறப்பித்தார்.
திறமைவாய்ந்த கலைஞர்களுக்கு கொடுக்கப்படும் விருதுகள் போன்று திருநங்கைகளுக்கும் விருதுகள் கொடுத்து முன்னிலைப் படுத்த வேண்டும் என்று மருத்துவர் அமர் பிரசாத் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக உணர்ச்சிகரமாக நாடகத்தை அரங்கேற்றிய நாமக்கல் ரேவதிக்கு (திருநங்கை) கலைமாமணி விருது வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அதுமட்டுமின்றி திருநங்கைகளுக்காக முதன் முதலில் புத்தகம் எழுதி வெளியிட்டவர் ரேவதி (திருநங்கை) என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இடத்தை பிடித்தவர் நபீஸா சென்னையை சேர்ந்தவர். இரண்டாவது இடத்தை பெற்றவர் இனியா ஈரோட்டைச் சேர்ந்தவர். 3வது இடத்தை பிடித்தவர் மதுமிதா காரைக்குடியைச் சேர்ந்தவர். நடிகர் நகுல் அவர்களின் மனைவி அவர்களால் முதல் பரிசு வழங்கப்பட்டது. இறுதியாக ஆறுதல் பரிசு பெற்றவர் ரேணுகா தூத்துக்குடியை சேர்ந்தவர்.