Skip to main content

தனிமனித இடைவெளியைப் பின்பற்றாத ஆவண எழுத்தர் அலுவலகத்திற்கு சீல்!

Published on 29/09/2020 | Edited on 29/09/2020

 

தனிமனித இடைவெளியுடன் அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் பொதுமக்களை காக்கவைக்கவோ, உட்காரவைக்கவோ கூடாது. அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் வரவேண்டும் என மக்களுக்கும் வேண்டுக்கோள் விடுத்துள்ளது அரசு.

 

பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் முன்கூட்டியே அனுமதி பெறவேண்டும், பத்திரம் எழுதும் இடங்களில் மக்கள் கூட்டங்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளைப் பெரும்பாலான அலுவலகங்கள் கடைப்பிடிப்பதில்லை. 

 

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்பதிவாளர் அலுவலகம் முன்பாக பல ஆவண எழுத்தர்கள் உள்ளனர். இவர்களின் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. இதுபற்றிய புகார், உயர் அதிகாரிகளுக்குச் சென்றதன் அடிப்படையில், மாவட்ட கலால் அதிகாரி சரஸ்வதி, செப்டம்பர் 29ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத பத்திரப் பதிவு எழுத்தர் அலுவலகம் ஒன்றுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வாணியம்பாடி வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்