Published on 16/11/2020 | Edited on 16/11/2020
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமத்தில் பழுவேட்டரையர்கள் காலத்தில் (1,400 ஆண்டுகள் பழமையான) மறவனேசுவரன் கோயில் அமைந்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு நேற்று சிவனடியார்கள் மறவனேசுவரன் கோயிலில் அமைந்துள்ள சிவலிங்கத்துக்கு 1008 ருத்ராட்சத்தால் செய்யப்பட்ட மாலையை அணிவித்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இக்கோவிலில் தமிழ் மரபுப்படி மந்திரங்கள் சொல்லி, எண்ணெய் தீபம் ஏற்றி, கற்பூரம் காண்பித்து சிவனடியார்களால் வழிபாடு நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவலிங்கத்தை வழிபட்டனர்.
மேலும், சிவனடியார்களாக தொண்டாற்றுவோருக்கு சிவலிங்கத்துக்கு வழிபாடு நடத்திய பின்னர், ருத்ராட்ச மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.