Skip to main content

இந்திய அளவிலான போட்டித் தேர்வு: அசத்திய பெண் எஸ்.ஐ; பாராட்டிய டிஜிபி!

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Aasthiya Bena S.I. in All India Competitive Examination Appreciation DGP

 

இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணருக்கான போட்டித்தேர்வில் தமிழக காவல் துறையின் உதவி ஆய்வாளர் ஜெ. தேவிபிரியா தேசிய அளவில் 2 வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

 

2023 ஆம் ஆண்டிற்கான அகில இந்திய அளவிலான விரல் ரேகை நிபுணர்களுக்கான போட்டித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21 ஆம் தேதி வரை டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டித் தேர்வில், திருவண்ணாமலை மாவட்ட ஒரு விரல் ரேகைப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரியும் ஜெ. தேவிபிரியா கலந்துகொண்டார். அவர் இந்த போட்டித் தேர்வில் 250 மதிப்பெண்களுக்கு 235 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

 

இந்நிலையில் இவரது சாதனையைப் பாராட்டும் விதமாக தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் போட்டித் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த ஜெ.தேவிபிரியாவை அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இவர் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் தனிப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரியும் ப. ஜெய்சங்கர் என்பவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்