Skip to main content

கொடைக்கானலில் ஒருவாரம் கடைகள் இயங்காது!! 

Published on 21/07/2020 | Edited on 21/07/2020

 

kodaikanal corona update

 

தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் ஒரே நாளில் மொத்தமாக கரோனா தொற்று தினமும் 3 ஆயிரத்தைக் கடந்து பதிவாகி வருகிறது. இதனால் சில மாவட்டங்களில் வணிகர்களே முன்வந்து கடையடைப்பு மற்றும் கடைகள் திறந்திருப்பதற்கான நேரங்களில் கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அண்மையில் விருத்தாசலத்தில் கரோனா ஆரம்ப காலத்தில் தொற்றும், உயிரிழப்பும் குறைந்து காணப்பட்ட நேரத்தில் முழுமுடக்கத்தை அமல்படுத்திவிட்டு தற்பொழுது அதிகரிக்கும் சூழலில் தளர்வுகள் ஏன்? முழுமுடக்கம் வேண்டும் என விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பில் போராட்டம்கூட நடத்தப்பட்டது. இப்படி ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறுநிலைகள் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் ஒருவாரத்திற்கு கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் கொடைக்கானலில் 23-ஆம் தேதி முதல் வரும் 29ஆம் தேதி வரை பால் விற்பனை கடை, மருந்தகம் தவிர அனைத்துக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்