Published on 18/09/2020 | Edited on 18/09/2020

சென்னையில் ஷேர் ஆட்டோவில் பயணித்த ஆசிரியையிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பல்லாவரத்தில், ஓடிக்கொண்டிருக்கும் ஷேர் ஆட்டோவில் பயணித்த ஆசிரியை சரஸ்வதியிடம், தங்க சங்கலியைப் பறித்து ஆட்டோவில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ள காட்சி, அங்கு இருந்த சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது. கீழே விழுந்த ஆசிரியை சரஸ்வதி கூச்சலிட, பொதுமக்கள் ஓடி சென்று ஆட்டோவை மடக்கிப் பிடித்து உள்ளே இருந்த பெண் உட்பட இருவரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
ஆட்டோவை ஓட்டி வந்து நகை பறிப்பில் ஈடுபட்ட பிரசாந்த், ரோஸ்மேரி ஆகியோரை கைது செய்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.