Skip to main content

கள்ளச்சாராய விவகாரம்; கைது செய்யப்பட்ட வியாபாரிகளிடம் தீவிர விசாரணை

Published on 20/06/2024 | Edited on 20/06/2024
Serious investigation of the arrested illicit

கள்ளக்குறிச்சி நகரப் பகுதியான ஏழாவது வார்டில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது வருவதாகத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாகவும், இதனைப் பலர் வாங்கி குடித்ததாகவும் கூறப்படுகிறது. முதலில் 4 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 38 ஆக உயர்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் ஜிப்மர் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் எனப் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழப்புக்கு பாக்கெட் கள்ளச்சாராயம் காரணமாக இருக்கலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் இறந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்வு செய்யப்பட்ட பிறகே முழுமையான காரணம் தெரிய வரும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதேநேரம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கள்ளச்சாரயா வியாபாரிகள் கண்ணுகுட்டி(எ) கோவிந்தராஜ் அவரது மனைவி விஜயா‌,‌ அவரது தம்பி தாமோதரன் உள்ளிட்ட 4 பேரை கள்ளக்குறிச்சி போலீசார் கைது செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சார்ந்த செய்திகள்