lubber pandhu team tribute to vijayakanth

உதயநிதி நடிப்பில் 2022ஆம் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றிய தமிழரசன் பச்சமுத்து முதல் முறையாக இயக்கியுள்ள திரைப்படம் ‘லப்பர் பந்து’. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஷ் கல்யாண் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க சஞ்சனா, சுவாசிகா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன், டி.எஸ்.கே. உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 20ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் விஜயகாந்த் ரசிகராக நடித்திருப்பதால் விஜயகாந்த் பட பாடல்கள் பல்வேறு காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விஜயகாந்தின் ரெபரன்ஸ்களும் இடம்பெற்றுள்ளது. இதில் படத்தில் இடம்பெற்ற விஜயகாந்தின் ‘நீ பொட்டு வெச்ச தங்க குடம்...’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில் லப்பர் பந்து படக்குழு, விஜயகாந்தின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், தே.மு.தி.க. அலுவலகத்திற்கு செல்லும் படக்குழு விஜயகாந்தின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்பு அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கிறார்கள். மேலும் அங்கு வரும் மக்களுக்கு உணவு வழங்குகின்றனர். இதற்கு முன்பு விஜய்யின் ‘தி கோட்’ படத்தில் விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தியதற்கு அப்படக்குழு பிரேமலதா விஜயகாந்த் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment