கிரானைட் வழக்குகள் செப். 20க்கு ஒத்திவைப்பு
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பட்டா இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி முன்னாள் கலெக்டரால் பிஆர்பி மற்றும் தனி நபர்கள் மீது தொடரப்பட்ட 46 வழக்குகள் நேற்று விசாரணைக்கு வந்தன. இதேபோல் கீழவளவு, ஒத்தக்கடை பகுதியில் அத்துமீறி கற்களை வெட்டியதாக பிஆர்பி கிரானைட், சிந்து கிரானைட், ஓம் கிரானைட், பல்லவா கிரானைட் ஆகிய நிறுவனங்கள் மீதான 8 வழக்குகளும் விசாரணைக்கு வந்தன. மொத்தமுள்ள 54 வழக்குகளும் செப். 20க்கு ஒத்திவைக்கப்பட்டது.