Skip to main content

‘கறுப்பர் கூட்டம்’ செந்தில்வாசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

Published on 28/07/2020 | Edited on 28/07/2020
df

 

‘கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில் 'கந்த சஷ்டி கவசம்' குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாகவும், இது இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது. 

 

அதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் உரிமையாளர் செந்தில்வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதையடுத்து அதன் தொகுப்பாளரான நாத்திகன் என்கிற சுரேந்திரன் நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்தபடி தமிழக போலீசாரிடம் அவர் சரணடைந்தார். புதுச்சேரியில் சரணடைந்த சுரேந்திரனை தமிழக போலீசார் சென்னை அழைத்து வந்தனர். எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சுரேந்திரனுக்கு 30- ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து தற்போது செந்தில்வாசன் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ்!

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Goondas act on Rowdy Karukka Vinoth

 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத், கடந்த மாதம் 25 ஆம் தேதி ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பாஜக உள்ளிட்ட சில கட்சி பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் மாளிகையும் குற்றச்சாட்டுகளை வைத்தது. 

 

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், கருக்கா வினோத் என்பவர் ஏற்கனவே தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்திருந்தது.

 

இதையடுத்து, அவர் மீது வெடிபொருள் தடைச்சட்டம், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

 

இந்த நிலையில் ரவுடி கருக்கா வினோத் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாலும், அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தினாலும் சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவின் பேரில், தற்போது ரவுடி கருக்கா வினோத்தை குண்டாஸ் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர். அதற்கான ஆணையை புழல் சிறையில் இருக்கும் கருக்கா வினோத்திடம் போலீசார் கொடுத்துள்ளனர். 

 

 

Next Story

சிறுமியை கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை; 7 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

Girl child issue police arrested 7 under goondass act

 

சேலம் அருகே, பள்ளிச் சிறுமியை கடத்திச்சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

 

சேலம் பழைய சூரமங்கலத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி அந்தப் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஏப். 25ம் தேதி காலை, அப்பகுதியில் உள்ள மருந்து கடைக்கு தனியாக சென்று கொண்டிருந்தார். வீட்டுப் பக்கத்தில் உள்ள மளிகைக் கடையில் வேலை செய்து வந்த வினித் என்கிற வினோத் (23), சிறுமியிடம் அவளுடைய தந்தை அழைத்ததாகச் சொல்லி தனது மோட்டார் சைக்களில் தேக்கம்பட்டி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். 

 

அங்கு வைத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வினித், உடன் இருந்த தன் நண்பர்களுக்கும் சிறுமியை இரையாக்கினார். மருந்து கடைக்குச் சென்ற மகள் இரவாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். இரவு 9 மணியளவில் சிறுமி தானாகவே வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார். மறுநாள் ஏப். 26ம் தேதி காலையில் வெளியே சென்ற சிறுமி அன்றும் இரவு நேரத்தில்தான் வீடு திரும்பினார்.

 

வீட்டுக்கு வந்தபோது மிகவும் சோர்வாக இருந்ததால், சிறுமியிடம் அவருடைய தந்தையும், அத்தையும் விசாரித்துள்ளனர். அப்போதுதான் அவரை, வினித்தும் அவனது கூட்டாளிகளும் கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டதாக கதறி அழுதபடியே கூறியிருக்கிறார்.

 

இதுகுறித்த புகாரின்பேரில், சூரமங்கலம் மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். சிறுமியை கூட்டாக சேர்ந்து வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்த வினித், தேக்கம்பட்டி விக்னேஷ் (21), ஆகாஷ் (19), சீனிவாசன் (23), அருள்குமார் (23), கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த மொன்னையன் என்கிற துரைசாமி (22), கூழை பிரபு என்கிற பிரபு (24) ஆகிய 7 பேரை கைது செய்தனர். இவர்கள் அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

 

இவர்களில் வினித்தும், விக்னேஷூம் அண்ணன், தம்பிகள் ஆவர். பாலியல் வன்கொடுமை விவகாரத்தை வெளியே சொன்னால் சிறுமியையும், அவருடைய தந்தையையும் கொன்று விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். கைதான 7 பேரும் நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

 

இது ஒருபுறம் இருக்க, மொன்னையன் என்கிற துரைசாமி, கூழை பிரபு என்கிற பிரபு ஆகியோர் மீது வேறு சில குற்ற வழக்குகளும் இருப்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும், கிச்சிப்பாளையம் கோவிந்த காடு தோட்டம் காட்டு வலவு பகுதியைச் சேர்ந்த சின்னவர் என்பவரை கடந்த ஏப். 2ம் தேதி வழிமறித்து அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றுள்ளனர். 

 

அதேநாளில் இவர்கள் இருவரும், ரமே என்பவரிடம் கத்தி முனையில் 4000 ரூபாயை வழிப்பறியும் செய்துள்ளனர். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக கிச்சிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்துள்ளனர். 

 

கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் 7 பேரும் மேலும் பல குற்றங்களில் ஈடுபடக்கூடும் என்பதோடு, பொது அமைதியை சீர்குலைக்கும் குற்றங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 7 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல்துறை துணை ஆணையர்கள் லாவண்யா, கவுதம் கோயல் ஆகியோர் ஆணையருக்கு பரிந்துரை செய்தனர்.

 

அதன்பேரில் காவல்துறை ஆணையர் விஜயகுமாரி அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வினித் உள்ளிட்ட 7 பேரையும் ஒரே நாளில் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ஒரே நாளில் 7 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் சமூக விரோத கும்பல் மத்தியில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.