
லோக் ஆயுக்தா சட்டம் குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறுவது, கசாப்பு கடைக்காரர் காருண்யம் பற்றி பேசுவதை போன்றது என கூட்டுறவு அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,
ஸ்டாலின் சொல்வது என்னவென்றால், கசாப்பு கடைக்காரன் காருண்யம் பேசுவது போல் ஊழில் திளைத்த திமுக, அதிமுக கொண்டுவந்துள்ள இந்த லோக் ஆயுக்தா சட்டம் குறித்து குறைசொல்வது என்பது கசாப்பு கடைக்காரன் காருண்யம் பேசுவது என்று சொல்லும் பழமொழி போல். ஊழலுக்காகவே கலைக்கப்பட்டது திமுகவின் ஆட்சி.
இன்னும் சொல்வது என்றால், வட்டத்தில் இருந்து மாவட்டம் வரைக்கும் ஊழலல் செய்யக்கூடிய கட்சி. அவர்கள் சொல்வதையெல்லாம் ஒரு பொருட்டாக கருதக்கூடாது.