Skip to main content

மாணவிக்கு தவறான மெசேஜ் அனுப்பிய பேராசிரியர்; தட்டிக்கேட்ட இளைஞருக்கு கத்திக்குத்து

Published on 04/03/2023 | Edited on 04/03/2023

 

Seerlazhi government college student injured police searching professor

 

சீர்காழியில் அரசு கல்லூரி பேராசிரியர் மாணவியின் செல்போனுக்கு தவறான மெசேஜ் அனுப்பியதை தட்டிக் கேட்ட மாணவனை அடியாட்களை வைத்து கத்தியால் குத்திய கொடூரம் மாணவர்கள் வட்டாரத்தை பதறவைத்துள்ளது.

 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூரில் அமைந்துள்ளது அரசு கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரி ஆங்கிலப் பேராசிரியரான சத்தியமூர்த்தி என்பவர், அதே கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவருக்கு செல்போனில் தவறான மெசேஜ் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது.  இதனை அதே கல்லூரியில் பயின்று வரும் மூன்றாமாண்டு மாணவர் திலீப்குமார் தட்டிக் கேட்டுள்ளார். கல்லூரி முடிந்து வெளியே வந்த அந்த மாணவரை கீழவல்லம் கிராமத்தை சேர்ந்த அருளரசன், அருள்செல்வன் உள்ளிட்ட அடியாட்களை வைத்து கத்தியால் வயிற்றில் குத்த வைத்துள்ளார் பேராசிரியர் சத்தியமூர்த்தி. படுகாயமடைந்த திலீப்குமார் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

Seerlazhi government college student injured police searching professor

 

இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருளரசன், அருள்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவான பேராசிரியர் சத்தியமூர்த்தி உள்ளிட்ட இரண்டு பேரை தேடி வருகின்றனர்.

 

Seerlazhi government college student injured police searching professor

 

பேராசிரியர் சத்தியமூர்த்தி அதிமுக திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்