Published on 30/08/2021 | Edited on 30/08/2021

கரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் நீண்ட நாட்களாக பள்ளிக்குச் செல்லமுடியாமல், ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களைப் படித்து வருகிறார்கள். தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால் செப்டம்பர் 1ம் தேதியில் இருந்து 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் செய்து வருகிறார்கள். இதற்கிடையே பள்ளிகள் திறப்பு குறித்து இன்று முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்ய உள்ளார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.