
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா தற்போது அவரின் தண்டனை காலத்தை நிறைவு செய்த நிலையில் இன்று காலை பெங்களூருவிலிருந்து சென்னை கிளம்பி உள்ளார். காலை 7.30 மணி அளவில் அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணத்தைத் தொடங்கிய அவர் தமிழக எல்லையைக் கடந்து வந்துகொண்டிருக்கிறார். அவரது வருகையையொட்டி தமிழக எல்லையில் சசிகலா ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். அதேபோல் பாதுகாப்புப் பணியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சசிகலா வருகையையொட்டி கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே அவரை வரவேற்க வெடிக்கப்பட்ட வெடியால் இரண்டு வாகனங்கள் தீக்கிரையானது. இதில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இருப்பினும் இதுகுறித்து கிருஷ்ணகிரி போலீஸார் விசாரித்து வருகின்றனர். எரிந்து கொண்டிருக்கும் வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.