Published on 21/07/2018 | Edited on 21/07/2018

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த இளமங்கலம் அருகே வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க எல்லை வரையறை செய்து கல் நடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தகவல் அறிந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் மணல் குவாரி அமைக்கக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.