Skip to main content

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரே நேரத்தில் 3900 பேர் ஆடிய நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சி

Published on 14/10/2018 | Edited on 14/10/2018

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சபாபதி சங்கீத கான சபா டிரஸ்ட் சார்பில் நவராத்திரி சம்பூர்ண இசை விழா இம்மாதம்  9-ஆம் தேதி தொடங்கி 13-ம்  தேதி வரை நடைபெற்றது.  இதன் நிறைவு நாளான 13-ஆம் தேதி மாலை 6 மணி முதல் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள 3 ஆயிரம் பரதநாட்டியம் பயின்ற மாணவிகள் கோயிலின் ஆயிரக்கால் மண்டபத்தில் உள்ளேயும் வெளியேயும் 4 பகுதியாக பரத நாட்டியம் ஆடினார்கள்.

at the same time

 

இதில் 6 லிருந்து 10 வயதுடையவ  மாணவிகள் பல்லவியும் 11 வயதிலிருந்து 15 வயது வரை அனுபல்லவியும் மற்றும் 16 வயதி லிருந்து 20 வரை சரணமும் 21 லிருந்து 60 வயது வரை உள்ளவர்கள்  கீர்த்தனை சரணம் என வகைபடுத்தப்பட்டு நாட்டியம் ஆடினார்கள்.

 

மேலும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ஒரே சமயத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் நடராஜர்கோவிலில்  ஆயிரங்கால் மண்டபத்துக்கு செல்ல முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டு நாட்டிய மாணவிகள் நெரிசலில் சிக்கி தவித்தனர். அப்போது நெரிசலில் சிக்கிய மாணவிகளிடமிருந்து அய்யோ காப்பாத்துங்க ஒன்ற குரலும் ஓங்கி ஒலித்தது.  இதனால் கோவிலில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

at the same time

 

அப்போது சிதம்பரம் சரக போலீஸ் டிஎஸ்பி பாண்டியன் மற்றும் போலீசார் வந்து போராடி நாட்டிய மாணவிகளை  பாதுகாப்பாக உள்ளே இருந்து வெளியே அனுப்பி வைத்தனர். பின்னர் நாட்டியம் ஆடுவதற்கு உள்ளே செல்வதற்கும்  ஆடிய பிறகு வெளியே செல்வதற்கும் ஒரேவழியாக இருந்ததால் நாட்டிய கலைஞர்கள் சிரமப்பட்டனர். நெரிசலுக்கு பிறகு வெளியே செல்வதற்கு இரண்டு வழிகள் ஏற்படுத்தப்பட்டது. 

 

சார்ந்த செய்திகள்