Published on 27/11/2020 | Edited on 27/11/2020

நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் 4- வது முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணையின் நீர்மட்டம். அணை கட்டப்பட்டு 87 ஆண்டுகள் ஆகும் நிலையில், 66- வது ஆண்டாக 100 அடியை எட்டியது அணையின் நீர்மட்டம்.
'நிவர்' புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்திருந்த நிலையில் 100 அடியை எட்டியுள்ளது. அதேபோல் தமிழகத்திற்கான காவிரி நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.