Published on 25/09/2020 | Edited on 25/09/2020
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கியது.
தொடர் நீர்வரத்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் 99.62 அடியாகவும், நீர்இருப்பு 64.34 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 49 ஆயிரம் கனஅடியில் 35 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து வினாடிக்கு 20,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு 850 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது.
இதனிடையே, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து வினாடிக்கு 45,000 கனஅடியிலிருந்து 40,000 கனஅடியாகக் குறைந்துள்ளது.