Published on 12/09/2020 | Edited on 12/09/2020
![salem district mettur dam water level](http://image.nakkheeran.in/cdn/farfuture/4-91sbDmvh8S3X89CCNPf1ztEI8vxzS_OFjmUdrQnGo/1599879994/sites/default/files/inline-images/mettur%20dam2222%20%281%29_6.jpg)
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இன்று (12/09/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 10,045 கனஅடியில் இருந்து 10,068 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 92.12 அடியாகவும், நீர்இருப்பு 55.10 டி.எம்.சி.யாகவும் இருக்கிறது. மேலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6,000 கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 700 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.