Skip to main content

சேலம்: குறட்டை விட்டு தூங்கிய வார்டன் அதிரடி சஸ்பெண்ட்! 

Published on 06/02/2019 | Edited on 06/02/2019
ச்


சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என 800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். கொடுங்குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறைக்கூடமாக சேலம் மத்திய சிறை கருதப்பட்டு வருகிறது. அதனாலேயே இந்த சிறையை, கருப்பு குல்லா சிறை என்று ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து அழை க்கப்பட்டு வருகிறது.


ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே சிறைக்குள் கஞ்சா, புகையிலை, செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் கைதிகளிடம் தாராளமாக புழங்கி வருகின்றன. வார்டன்கள் மூலமாக கைதிகளுக்கு செல்போன் பரிமாற்றம் செய்யப்படுவதாக வந்த புகார்கள் குறித்தும் சிறைத்துறை நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.


இதனால் ஒரே வார்டனை குறிப்பிட்ட பிரிவில் நீண்ட காலத்திற்கு பணியாற்றாமல், சுழற்சி முறையில் வெவ்வேறு பிரிவுகளுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். எந்த நேரமும் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


இந்நிலையில், சிறை எஸ்பி தமிழ்ச்செல்வன், நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வார்டன் வினோத் எஸ்பி வருவதைக்கூட அறியாமல், நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவலர் வினோத்தை அந்த இடத்திலேயே சஸ்பெண்ட் செய்து எஸ்பி தமிழ்ச்செல்வன் உத்தரவிட்டார்.


இந்த சம்பவத்தால் சிறைக்காவலர்கள் மத்தியில் பரபரப்பும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்