Skip to main content

ஊரக உள்ளாட்சி தேர்தல்... வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நாம் தமிழர் கட்சி!

Published on 19/09/2021 | Edited on 19/09/2021

 

Rural local elections ... Naam tamilar Party, have released the list of candidates!

 

தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கிடையே, இந்த ஒன்பது மாவட்டங்களிலும் வேட்புமனு தாக்கல் 15.09.2021 அன்று துவங்கியது.

 

இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

''ஜெயக்குமாருக்கு பண கொழுப்பு..''-சீமான் ஆவேசம்!

Published on 03/08/2022 | Edited on 04/08/2022

 

'Will you speak against BJP if you speak against me?'-Seeman interview!

 

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217வது நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. நிர்வாகிகள் மலர்த்தூவி மரியாதைச் செலுத்தினர்.

 

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், '' தமிழ்நாட்டின் ஏற்றத்திற்கு பாடுபட்டவர் அண்ணா. அவருக்கு நினைவு சின்னமாக மூக்குப்பொடி டப்பாவை வைப்பீர்களா என சீமான் கேட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மேக்கப் செட்டை நினைவு சின்னமாக வைப்பீர்களா எனச் சீமான் கேட்டுள்ளார். என்ன வாய்க் கொழுப்பு சீமானுக்கு. இந்த வாய்க் கொழுப்பை தயவு செய்து திமுகவிடம் காட்டுங்க, அதிமுகவிடம் காட்டாதீங்க. காட்டினால் பின் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும். அதைமட்டும் சீமானுக்கு சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். பிற்காலத்தில் உங்க கட்சிக்காரங்க உங்களுக்கு சிலை வைக்க வேண்டுமென்றால் சிலோனில் சென்று ஆமைக்கறி சாப்பிட்டீங்களே அந்த ஆமையைதான் சிலையாக வைப்பார்களா? தயவு செய்து அதிமுகவுடன் விளையாட வேண்டாம்'' என்றார்.

 


இதற்கு செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பதிலளித்துள்ள சீமான், ''எனக்கு வாய் கொழுப்புனு ஜெயக்குமார் சொன்னா அவர்களுக்கு பண கொழுப்பு. ஜெயக்குமார் மேல மரியாதை வெச்சிருக்கேன் அதை காப்பாற்றிக்கொண்டு போயிடனும். நீங்க பணம் கோடி கோடியா கொள்ளையடிச்சு வெச்சிருக்கிங்க, என்னை எதிர்த்து பேசற நீங்க பிஜேபியை எதிர்த்து பேசுவீங்களா? காலைல ரெய்டு வந்துரும். பேசுவதற்கு யாரும் இல்லை என்பதால் என்னைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இதே ஸ்டாலினை எதிர்த்து பேசினால் காலையில் சோதனை வரும். தேர்தலில் தனித்து நிற்பீங்களா? தேர்தலில் தனித்து நிற்போனும்னு ஜெயலலிதா சமாதியில் சத்தியம் செய்வீர்களா? வாக்குக்கு ஒரு ரூபாய் தரமாட்டேன்னு சொல்லுவீர்களா? '' என ஆவேசமாகப் பேசினார்.