
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் இருந்து நேற்று 07.01.2019 திங்கள் கிழமை 07:00 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஜோசப் 55 த/பெ பூவையா, கோட்டைப்பட்டிணம், புதுக்கோட்டை மாவட்டம் என்பவருக்குச் சொந்தமான INDTN10MM998 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த ரனீசன் 36 த/பெ தியாகுலம், ராஜா 34 த/பெ சேகர், விஜி 30 த/பெ பாபு, மணிகண்டன் 33 த/பெ அழகர், ஆகிய நான்கு மீனவர்கள் 08.01.2019 அதிகாலை 03:00 மணிக்கு எல்லை தாண்டி சுமார் 33 NM தொலைவு நெடுந்தீவு பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்தாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து காரைநகர் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வருவதாக கைது செய்வதும் கொலை வெறி தாக்குதல் நடத்துவதும் வழக்கமாகி விட்டது. இதனால் மீனவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது.. தொடரும் சம்பவத்தால் மீனவ கிராமங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.