Skip to main content

 ஒரே ரேஷன் கார்டு திட்டம் - ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கி வைத்தார்

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

 

நாடு முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரு நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியை சேர்ந்தவரும், எந்த பகுதியிலும் பொது வினியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.

 

r


இந்த திட்டத்துக்கான பணிகளை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில், முதற்கட்டமாக நேற்று 4 மாநிலங்களில் இந்த திட்டத்தை மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தொடங்கிவைத்தார். அதன்படி ஆந்திரா-தெலுங்கானா மற்றும் குஜராத்-மராட்டியம் மாநிலங்களுக்கு இடையே பொருட்கள் வாங்கிக்கொள்ளும் திட்டம் தொடங்கப்பட்டது.

 

இதன் மூலம் ஆந்திரா மக்கள் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது தெலுங்கானாவிலோ பொருட்கள் வாங்க முடியும். மேலும் தெலுங்கானா மக்களும் தங்கள் மாநிலத்தின் எந்த பகுதியிலோ அல்லது ஆந்திராவிலோ பொருட்கள் வாங்கலாம். இதைப்போல குஜராத், மராட்டிய மக்களும் தங்கள் மாநிலங்களுக்குள் பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம்.
 

சார்ந்த செய்திகள்