Skip to main content

அதிமுக அரசு கோமாநிலைக்கு போய்விட்டது; இரா.முத்தரசன் சாடல்

Published on 11/06/2019 | Edited on 11/06/2019

 

"அதிமுகவில் தற்போது நிலவி வரும் உட்கட்சிப் பூசலால் அரசு நிர்வாகம் முடங்கி கோமா நிலையில் கிடக்கிறது,"என தனக்கே உரிய பாணியில் நக்கலடித்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்.

 

ம்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டிக்கு வந்திருந்த அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறுகையில், " காவிரி டெல்டா பாசனப்பகுதிகளில் மத்திய அரசு 276  ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க வேதாந்த குடும்பத்தினரின் சார்பில் செயல்படுத்தி வருவது காவிரி பாசன மாவட்ட மக்களை புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாக்கி குடிநீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டு காவிரி பாசன மாவட்டங்களில் பாலைவனமாக மாறிவிடும் ஒரு அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாநில அரசு இந்தத் திட்டத்தில் மௌனம் சாதிப்பது மத்திய அரசுக்கு உடந்தையாக இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அந்த சந்தேகத்தை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டா பாசன மாவட்டங்களைத் தவிர விழுப்புரம், ராமநாதபுரம், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமும் வெகுவாக பாதிக்கப்படும்.

 

 மேலும் இம்மாவட்ட மக்கள் வேலை வாய்ப்பை இழந்து வெளிமாநிலங்களுக்கு புலம் பெயரும் அபாய நிலை ஏற்படும். தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் ஆளும் கட்சியில் உட்கட்சி பூசல் ஏற்பட்டுள்ளது அதில் தலையிட விரும்பவில்லை. ஆனால் ஆளும் கட்சியினர் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து செயல்பட முடியாமல் கோமா நிலைக்குப் போய்விட்டது இதனால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகிவிட்டனர். எனவே ஆளும் கட்சியினர் இப்பிரச்சினைகள் சமரச தீர்வு ஏற்படுத்திக்கொண்டு மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து தொய்வில்லாமல் செயல்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்." என்றார்.
 

சார்ந்த செய்திகள்