Skip to main content

தடை செய்யப்பட்ட இரட்டைமடி மீன்பிடிப்பு... அதிகாரிகளிடம் மீனவர்கள் வாக்குவாதம்...!

Published on 11/01/2019 | Edited on 11/01/2019
ra

 

    ராமேஸ்வரம் பகுதியில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி மீன்பிடிப்பு தற்பொழுது துவங்கியுள்ளதால், மீன்பிடி அனுமதிச்சீட்டு இல்லாமல் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மீன்வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் வாக்குவாதம் செய்தனர்.

 

    தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தும் மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெறாமல் அதிகாலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று விடுவதால் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கும் போது தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் கடலில் பிரச்சினை ஏற்படுகிறது.  


இந்நிலையில் அரசு அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் ஒரு சில மீனவர்கள் இலங்கை கடற்படையில் பாதிக்கப்படுகின்றனர் ஆகவே தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீனவர்கள் மீதும் அனுமதிச்சீட்டு பெறாமல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி துறைமுகத்தில் உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மீனவர்களிடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது.


 இதனையடுத்து இப்பகுதிக்கு வந்த மீனவர் சங்க தலைவர்கள் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து மற்ற மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இதனால் ராமேஸ்வரம் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்