Published on 01/01/2020 | Edited on 01/01/2020
ஜனவரி 5ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பருவமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பருவமழை காரணமாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும். கிழக்கு திசை காற்றும் மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதியாக தமிழ்நாடு இருப்பதால் மழை பெய்கிறது. அதிகபட்சமாக செம்மஞ்சேரியில் 4 சென்டி மீட்டர் மழையும், கொளப்பாக்கம் விமான நிலையம் மற்றும் குன்னூரில் தலா 3 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.