Published on 02/11/2018 | Edited on 02/11/2018

கடலூர் மாவட்டம் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி உள்ளிட்ட சுற்றுவட்டப்பகுதிகளில் கடந்த இரு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் நாற்று நடுவது, நாற்று எடுப்பது உள்ளிட்ட விவசாய வேலைகள் நடந்து வருகிறது.
அதே நேரத்தில் வீராணம் ஏரியில் போதுமான தண்ணீரை தேக்கி அறுவடை காலம் முடியும் வரை தண்ணீரை கொடுக்கவேண்டும். மழை அதிகமாக பெய்யும் என்ற அறிவிப்பு வந்தவுடன் அனைத்து தண்ணீரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் திறந்து விட்டுவிடக்கூடாது. ஏரி முழுகொள்ளவு எட்டிய பிறகு கூடுதலாக உள்ள தண்ணீரையே திறந்துவிடவேண்டும் என்று பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.