Skip to main content

மறுவாக்கு எண்ணிக்கைக்கு எதிராக மேல்முறையீடு!

Published on 01/10/2019 | Edited on 01/10/2019

ராதாபுரம் தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை வெற்றியை எதிர்த்து, திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில், ராதாபுரம் தொகுதியில் மூன்று சுற்று வாக்குகள் மற்றும் தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும் அக்டோபர் 4- ஆம் தேதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், தபால் வாக்குகளையும் சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இதற்கு ஆட்சேபனை தெரிவித்த தேர்தல் ஆணையம் தரப்பு, அக்டோபர்- 4 ஆம் தேதி சமர்ப்பிப்பது கடினம் என்றும், கூடுதல் அவகாசத்துடன், கூடுதல் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் தேவை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் மறுவாக்கு எண்ணிக்கையை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தலாம் என்று நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

radhapuram recounting high court order admk mla appeal at court


இதனிடையே உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடைக்கோரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.  2016- ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு 49 வாக்குக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்