27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பல குழப்பங்களுக்கிடையே நடந்து முடிந்து தேர்தல் முடிகளும் வெளியிடப்பட்டிருந்தால் அதில் பல குழப்பங்கள் பல ஊர்களில் தபால் வாக்குகளை எண்ணாமலேயே முடிவுகளை அறிவித்துவிட்டதாக இன்னும் போராட்டங்களும் நடக்கிறது. மற்றொரு பக்கம் அதிமுக - திமுக கூட்டணிக் கட்சிகள் ஒன்றியக்குழு மாவட்டக்குழுத் தலைவர்களை தேர்வு செய்ய சுயேட்சையாக வெற்றிபெற்ற வேட்பாளர்களை தூக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தலில் தோற்றவர்கள் பலரும் மீண்டும் அடுத்த தேர்தலில் சந்திப்போம் என்ற ரீதியில் துண்டறிக்கைகளும் அதில் சாக்லெட்டுகளும் இணைத்து வழங்கி வருகின்றனர்.
மற்றொரு பக்கம் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவி ஏற்புகளுக்கு தயாராகிக் கொண்டிருக்க சில சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் ஜனநாயக முறைப்படி செலவு பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் பல வேட்பாளர்கள் செலவு பட்டியலை சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அதில் கறம்பக்குடி ஒன்றியம் குளந்திரான்பட்டு கிராம ஊராட்சியில் போட்டியிட்ட துரை குணா என்கிற குணசேகரன் வேட்பு மனுதாக்கல் செய்தபோது அவரது மனு மற்றொரு கிராம ஊராட்சி வேட்பாளர்கள் பட்டியலில் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியானது. அதன்பிறகு தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு சரி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு என் மீதான வழக்குகளின் எண்ணிக்கையைவிட குறைவான வாக்குகளை தந்த வாக்காளர்களுக்கு நன்றிகள் என்று பதிவுகளை வெளியிட்டார். 4 ந் தேதி தனது செலவு பட்டியலையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு திகைக்க வைத்துள்ளார்.
அந்த பட்டியலில் வேட்புமனுவுக்காக வீட்டுவரி கட்டியது, முதல் நோட்டரி பப்ளிக் என்று செலவு கணக்கை தொடங்கி போட்டோ எடுத்தது நோட்டிஸ் அச்சடித்தது முதல் பெருங்களூர் உருமநாதர் கோயிலில் பூஜை செய்ய அர்சனைச்சீட்டு ரூ 5 உண்டியலில் போட்டது ரூ 11 என கோயில் செலவில் அர்ச்சர்களுக்கு கொடுத்தது, நண்பர்களுடன் வாக்கு சேகரிச்கச் சென்று டீ, வடை சாப்பிட்டது அதிலும் வடை தின்றது யார் என்ற பெயருடன் செலவு பட்டியலை வெளியிட்டு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
மேலும் அவர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை வரலாறு சொல்லும். என்னை தோற்கடித்த வாக்காளர்களுக்கு எனது நன்றியும் அன்பும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.