தமிழகம் முழுவதும் கரோனா நோய் தொற்று மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேவருகிறது. இந்நிலையில், சிகிச்சை பெறுபவர்களுக்கு போதிய இடவசதியும் படுக்கை வசதியும் இல்லாததால் பலர் ஆம்புலன்ஸிலேயே சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், திருச்சியில் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்டோர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், திருச்சி திருவெறும்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றிய சாந்தி என்ற செவிலியர் விடுமுறை எடுத்துக்கொண்டு துறையூரில் உள்ள தன்னுடைய அக்கா வீட்டிற்கு சென்றுள்ளார். இதையடுத்து, உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அந்த வகையில், அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.