Skip to main content

ஒரு பேல் பஞ்சின் விலை ஒரு லட்சமாக உயர்ந்தது! 

Published on 16/05/2022 | Edited on 16/05/2022

 

The price of a bale of punch went up to a lakh!

 

ஒரே ஆண்டில் ஒரு பேல் பஞ்சின் விலை 65,000 ரூபாய் அதிகரித்து, ரூபாய் 1,00,000- யை எட்டியுள்ளது. இதனால் ஆடைகளின் விலை கடுமையாக உயரும் என்கிறார்கள் பஞ்சாலை துறையினர். 

 

கடந்த 2021- ஆம் ஆண்டு மே மாதம் 355 கிலோ எடை கொண்ட ஒரு பேல் பஞ்சின் விலை ரூபாய் 45,000 ஆக இருந்தது. தற்போது ஒரு பேல் பஞ்சின் விலை ரூபாய் 1,00,000- யைக் கடந்துள்ளது. பஞ்சு விலையேற்றம் காரணமாக, ஜவுளித்தொழில் பெரும் பாதிப்பிற்குள்ளாகி இருப்பதாக பஞ்சாலைத் துறையினர் தெரிவிக்கிறார்கள். 

 

பருத்தியின் வரலாறு காணாத விலையேற்றம், தற்போதைய நிலையில் ஆயத்த ஆடை உள்ளாடை பிரிவில் 40% வரை விலை உயர்ந்துள்ளதாகவும், இனி வரும் பண்டிகை காலங்களில் கடந்த ஆண்டை விட மக்கள் இரு மடங்கு விலை கொடுத்து, ஆடைகளை வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. 

 

பஞ்சு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், பஞ்சு இருப்பின் அளவை வியாபாரிகள் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் பஞ்சாலைத் துறையினர் கோருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்